ரூலர் படத்தின் சென்சார் விவரம் இதோ !
By Sakthi Priyan | Galatta | December 18, 2019 17:35 PM IST

கடந்த 2014-ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தரமான படங்களை இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா நடிப்பில் ரூலர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பாலகிருஷ்ணாவின் 105-வது படமாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸரை வெளியிட்டு அசத்தியுள்ளது படக்குழு. முதல் லுக் போஸ்டரில் போலீஸ் யூனிஃபார்மில் கையில் சுத்தியலுடன் தோன்றினார் நடிகர் பாலகிருஷ்ணா. ஹாப்பி மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சோனல் சவுகான் நாயகியாக நடிக்கிறார். சிரந்தன் பட் இசையமைக்கிறார். டிசம்பர் 20-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் சென்சார் விவரம் தெரியவந்தது. படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது.