நிவின் பாலி நடிப்பில் கடந்த 2016-ல் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் Jacobinte Swargarajyam.இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் ரெபா மோனிகா ஜான்.தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார்.

அடுத்ததாக 2018-ல் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ரெபா.தொடர்ந்து தமிழ்,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் ரெபா.

அடுத்ததாக விஜய் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் ரெபா.பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.சமீபத்தில் குக் வித் கோமாளி அஸ்வினுடன் இவர் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் செம ஹிட் அடித்தது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரெபா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ரெபாவிடம் ரசிகர் ஒருவர் ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்துள்ளதா என்று கேட்க அதற்கு ஜாலியாக நிறைய வந்துள்ளது எதில் நடிப்பது என்று குழப்பத்தில் உள்ளேன் என்று செம ஜாலியாக பதிலளித்துள்ளார்.

reba monica john replies to fan about hollywood offers bigil kutty pattas