தமிழ் திரையின் சிறந்த நடிகையாக இருப்பவர் ஜோதிகா. 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி தந்தார். அதன் பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச்சிவந்த வானம் என தொடர்ச்சியாக ஹிட் படங்கள் தந்து அசத்தி வருகிறார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ராட்சசி, ஆக்‌ஷன் நாயகியாக நடித்திருந்த ஜாக்பாட் போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம்.

ponmagalvandhaal

இதையடுத்து, சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார். ஜெ.ஜெ.ஃபெட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்றது.

ponmagal vandhaal

தற்போது படத்தின் இரண்டு நாள் கொண்ட படப்பிடிப்பை இந்த மாத இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு போஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. 2020 ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் படம் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.