தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ராங்கி படத்தில் நடித்து வருகிறார். திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு. இது த்ரிஷாவின் 60-வது படமாகும்.

trisha

இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா மருத்துவராகவும், மற்றொரு கேரக்டர் என இரண்டு பாத்திரத்தில் நடிக்கிறார்.

trisha

இதன் இறுதி கட்டட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ்மெண்க்ஷனில் நடைபெற்றது. இந்தப் படத்தின் கதை த்ரிஷாவுக்கு புதியது. தற்போது இந்த படத்தின் தொங்கனா கொடுக்கா பாடல் நாளை மாலை வெளியாகவுள்ளது.