இந்திய மக்கள் வெள்ளித்திரைக்கு சமமான ஆதரவை சின்னத்திரைக்கும் வழங்குவர். அதேபோல் சின்னத்திரையில் மெகா தொடர்களை ரசித்து பார்ப்பது போலவே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீதும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். அந்தவகையில் இந்திய மக்களின் அநேக அபிமானத்தைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

உலக அளவில் மிகவும் பிரபலமான பிக் பிரதர் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மற்றொரு வெர்ஷன் இந்த பிக் பாஸ். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கி வருகிறது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். மலையாளத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 நிகழ்ச்சியின் ப்ரோமோ இன்று வெளியானது. பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 நிகழ்ச்சியையும் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.