தளபதி விஜய் பாடலுக்கு நடனமாடும் லாஸ்லியா ! விவரம் உள்ளே
By Sakthi Priyan | Galatta | October 09, 2019 17:00 PM IST

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்றாவது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டத்துக்கு பிறகு சாண்டியின் டான்ஸ் ஸ்டூடியோவில் மாணவர்களுடன் ஆடி மகிழ்ந்தார்.
சச்சின் திரைப்படத்தில் வாடி வாடி பாட்டிற்கு லாஸ்லியா நடனமாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாண்டியின் வீட்டில் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.