பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் படம் இதுவா ? ரசிகர்கள் ஆவல்
By Sakthi Priyan | Galatta | December 31, 2019 10:30 AM IST

தமிழ் திரையுலகில் மண் வாசனை நிறைந்த படங்களுக்கென தனி மவுசு உண்டு. இதை ரசிகர்களின் நாடியறிந்து சமர்ப்பிக்கும் இயக்குனர்களில் ஒருவர் முத்தைய்யா. சசிகுமார் நடித்த குட்டி புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், வரிசையாக ஹிட் படங்கள் தந்து திரை விரும்பிகள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்கள் இதற்கு சரியான உதாரணம். சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனை வைத்து தேவராட்டம் படத்தை தந்தார். ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்த்த இந்த படம் தென் மாவட்டங்களில் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் டிஜிட்டல் தளமான ஹாட்ஸ்டாருடன் இணைந்து குற்றப்பரம்பரை வெப்சீரிஸ் செய்யவிருப்பதாக செய்தி வெளியானது. இதுகுறித்து நம் நெருங்கிய திரை வட்டாரத்தை கேட்ட போது 2D நிறுவனத்துக்கு நடிகர் கார்த்தி வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. மேலும் இந்த வெப்சீரிஸ் பேச்சு வார்த்தையில் தான் உள்ளது என்பதும் தெரியவந்தது. நடிகர் கார்த்தி கைவசம் சுல்தான், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உள்ளது.