சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜாவின் அசத்தல் ஆட்டம் ! வீடியோ உள்ளே
By Aravind Selvam | Galatta | September 14, 2019 10:49 AM IST
மேயாத மான் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் இந்துஜா ரவிச்சந்திரன்.அந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.இதனை தொடர்ந்து அதர்வாவின் பூமராங்,கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதனை தவிர தளபதி விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும் அறிமுக இயக்குனர் AK இயக்கியுள்ள சூப்பர் டூப்பர் படத்தில் நடித்துள்ளார்.துருவா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.ஷா ரா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
திவாகர தியாகராஜன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் ஜில் ஜில் ராணி என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்