வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களை அடைத்துவைத்து விபசாரத்தில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராஜி, விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாமல், வறுமைக் காரணமாக மனைவியைக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி உள்ளார்.

husband requests

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். அதில், “வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட 25 பெண்கள், தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து, பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தன் மனைவி தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மனைவியை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்ற தரகர் சுதாகர், 2 லட்ச ரூபாய் தந்தால் தான் மனைவியை விடுவிப்பதாகக் கூறுவதாகவும் ராஜி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். இதனால், அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, தனது மனைவியை மீட்டுத் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

husband requests

இதனிடையே, பாதிக்கப்பட்ட ராஜிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.