குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவரின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. நடிகை நடாஷா சிங் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் பாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Gypsy Movie Release Update

இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.

Gypsy Movie Release Update

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுற்றது. இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ளது என்ற செய்தி தெரியவந்தது.