தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகை விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு பாஸ்களும் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் இந்த விழாவில் பேசிய வீடியோக்கள் வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

bigil

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் சில முக்கிய காட்சிகள் மதுரையில் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். செப்டம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தெரிகிறது.

bigil

படம் இந்த தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். இயக்குனர் அட்லீயுடன் விஜய் இணைவது இதோடு மூன்றாவது முறை என்பது கூடுதல் தகவல்.

bigilvijay