தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என பெயர் பெற்றவர் இயக்குனர் பாரதி ராஜா. மண்வாசனை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் இவருக்கு நிகர் இவரே. 

kuttraparambarai

இயக்கம் அல்லாது நடிப்பிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனின் தாத்தவாக நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். 

bharathiraja

இந்நிலையில் பாராதிராஜாவின் குற்றப்பரம்பரை படம்  தற்போது வெப்-சீரிஸ் வாயிலாக வெளிவரவிருக்கிறது. இதனை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தையும் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.