தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Atlee Tweet on Bigil 2 Prequel on Rayappan Vijay

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Atlee Tweet on Bigil 2 Prequel on Rayappan Vijay

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.குறிப்பாக ராயப்பன் என்ற கேரக்டர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.இந்த கேரக்டரின் எழுச்சி குறித்து ஒரு படம் எடுக்கலாமே என்று ரசிகர் ஒருவர் கேட்க.அட்லீயும் படத்தில் வருவது போல செஞ்சுட்டா போச்சு என்று க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

Atlee Tweet on Bigil 2 Prequel on Rayappan Vijay

ராயப்பன் எப்படி வடசென்னையின் டானாக உருவானார் என்பதை குறித்து இந்த படம் இருக்கும் என்று தெரிகிறது.இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.