ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் திரைக்கு இயக்குனராய் அறிமுகமானவர் அட்லீ. ஆரம்ப காலக்கட்டத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராய் இருந்தவர் பின் சிறந்த இயக்குனராய் அசத்தி வருகிறார். தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் தற்போது பிகில் என மூன்று படங்கள் இயக்கியுள்ளார்.

atlee

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது.

baasha

பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாட்ஷா 2 நிச்சயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் உள்ளதாக தெரிவித்தார்.