அதர்வா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 100. இவர் நடிப்பில் உருவான ஒத்தைக்கு ஒத்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ளார். பிரேமம் புகழ் அனுபமா ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படத்தில் நடிகர் அமிதாஷ் பிரதான் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

atharva

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் சமீபத்தில் நடந்து முடிந்தது. 

atharva atharva

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளது. இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.