அசுரன் ஸ்டண்ட் காட்சி உருவான விதம் ! மேக்கிங் வீடியோ
By Sakthi Priyan | Galatta | November 26, 2019 10:09 AM IST

எழுத்தாளர் பூமணியின் நாவல்களில் ஒன்றான வெட்கை நாவலை தழுவி அசுரன் படம் எடுக்கப்பட்டது. தனுஷின் தமிழ் திரையுலக பயணத்தில் அசுரன் படம் ஒரு முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்ற பெயரில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அக்டோபர் 4-ம் தேதி வெளியான படம் அசுரன். வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் நான்காவது படமாகும். தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மேலும் அம்மு அபிராமி, கென் கருணாஸ் பாடகர் டீ,ஜே, பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் OST எனப்படும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வரும் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி உருவான விதம் கொண்ட வீடியோ வெளியானது.