சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இவர் ஓ மை கடவுளே என்ற படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்துவருகிறார்.

Ashok Selvan Oh My Kadavule Shoot Wrapped

அசோக் செல்வன்,இறுதி சுற்று ரித்திகா சிங் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். Axxess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.அறிமுக இயக்குனர் அஸ்வந்த் மாரியப்பன் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Ashok Selvan Oh My Kadavule Shoot Wrapped

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.இந்த தகவலை படக்குழுவினர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது