சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் இணையும் அருண் விஜய் !
By Aravind Selvam | Galatta | November 26, 2019 17:10 PM IST

தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் சினம் படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து அருண் விஜய் ஈரம்,குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகனுடன் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.