ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதைதேர்வினால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி.தொடர்ந்து தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் அருள்நிதி.

வம்சம்,மௌன குரு,டிமான்டி காலனி,ஆராது சினம்,கே 13 என்று வரிசையாக இவர் நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.கடைசியாக ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த களத்தில் சந்திப்போம் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து டைரி,தேஜாவு,D ப்ளாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தேஜாவு படத்தினை  அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குகிறார்.இந்த படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸுடன் இனைந்து PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணைந்து தயாரிக்கிறார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.