தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Archana Kalpathi Asks For Thalpathy 64 Update

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத்,அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Archana Kalpathi Asks For Thalpathy 64 Update

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று விஜய் ஹீரோவாக அறிமுகமானதை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வந்தனர்.விஜய்க்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று தளபதி 64 குறித்த அறிவிப்பு ஏதேனும் அறிவிக்கலாமே என்று பதிவிட்டார்.

Archana Kalpathi Asks For Thalpathy 64 Update

இதனை தொடர்ந்து ரசிகர்களும் விரைவாக ஒரு அறிவிப்பு வேண்டும் என்று ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.தளபதி 64 ஃபர்ஸ்ட்லுக் ஆங்கில புத்தாண்டன்று அல்லது பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.