டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக விக்ரம் 58 எனப்படும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

cobra

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் சென்னை படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். கிரிக்கெட்டர் இஃர்பான் பதான் வில்லனாக அறிமுகமாகிறார். படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

cobra irfanpathan

இந்நிலையில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் என்பதால், இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.