கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தமிழில் ஆதித்ய வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகனாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகிறார். பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்த நடிகை பனிதா சந்து இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் நடித்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.

dhruvvikram

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 8-ம் தேதியிலிருந்து நவம்பர் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது என சமீபத்தில் தெரியவந்தது.

dhruvvikram dhruvvikram

தற்போது இப்படத்திலிருந்து இரண்டாம் Sneak Peek வீடியோ வெளியானது. துருவ் மற்றும் பனிதா சந்துவின் ரொமான்டிக்கான நடிப்பு இணையத்தை அசத்தி வருகிறது.