ஷாஜகான்,குசேலன்,கோ, போன்ற படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சோனா.தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் 
பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

Actress Sona Emotional Statement on Pacha Manga

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகின்றனர்.இதற்கு சோனா தற்போது விளக்கமளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Actress Sona Emotional Statement on Pacha Manga

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது "பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. 

Actress Sona Emotional Statement on Pacha Manga

கேரளாவில்   பெண்கள்   எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்  தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" என்று கூறியுள்ளார்.

Actress Sona Emotional Statement on Pacha Manga