ஆக்ஷன் படத்தின் விறுவிறுப்பான காட்சி இதோ !
By Aravind Selvam | Galatta | November 17, 2019 12:04 PM IST

அயோக்யா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஆக்ஷன்.இந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார்மதகஜராஜா,ஆம்பள படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்துள்ளார்.தமன்னா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகி பாபு,ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இந்த படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்