ஆதித்யா வர்மா ட்ரைலர் வெளியானது ! துள்ளலில் துருவ் ரசிகர்கள்
By Sakthi Priyan | Galatta | October 22, 2019 12:07 PM IST

கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தமிழில் ஆதித்யா வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகிறார்.
பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்த பனிதா சந்து இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் நடித்துள்ளார்.
ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரதன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தீபாவளிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியானது. கீழ் உள்ள லிங்கில் வீடியோ உள்ளது.