விக்ரம்...1986-ல் ஆரம்பிக்கப்பட்ட கதை, அதன் வாசம் இல்லாமல் புதுமைக்குள் நுழைய முடியாது. 86-ஐ சற்று எட்டிப்பார்த்து விட்டு 2022-க்குள் நுழைவோம்.

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச் செல்லப்படும் 'அக்னி புத்ரா' என்ற ஏவுகணையை, மீட்கப் போராடிய நாயகனே விக்ரம். ஏவுகணை ரிஸர்ச், 86-லிலே கணினி என அப்போதைய காலத்திலே வருங்காலத்தை காண்பித்தவர் கமல் ஹாசன். பாஷை தெரியாத சலாமியா நாட்டில் விக்ரம் செய்யும் ஒவ்வொரு செயலும் பலே. பாலைவனப் பிரதேசத்துக்குக் கமல் பயணித்து, அற்புத சாகசங்கள் பல புரிந்து, ஏவுகணையை மீட்டு வந்ததே 86-ம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் கதை.

காலம் நகர்கிறது...Gun-களும் புதுமையாகிறது. விக்ரம் தற்போது என்ன செய்கிறார் ? இந்த decade-ல் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ?... எதிரிகளை அடித்து நொறுக்குகிறாரா ? அல்லது சமூக வலைத்தளங்களில் அவர்களை திட்டி,டேக் செய்து பதிவு செய்துவிட்டு எஸ்கேப் ஆகிறாரா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

விக்ரம் திரை விமர்சனம்

உலகின் பார்வையை உலகநாயகனின் பார்வை கொண்டு டைட்டில் கார்டு முதலே ஃபேன் பாய் மொமெண்ட்டை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Drug மாஃபியா..அதாவது போதை பொருட்கள் கடத்தும் கும்பல் பற்றி பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஏன் லோகேஷ் கனகராஜின் முந்தைய படைப்பான "கைதி' படத்திலும் பார்த்தோம்.

இதில்(விக்ரம்) சற்று வித்தியாசம் என்னவென்றால், போதை பொருளை உருவாக்கும் கும்பல், அதை கைக்கூலிகள் கொண்டு கைமாத்தும் கும்பல் என டீல் செய்துள்ளனர்.

கேங்ஸ்டர் போர்வையில் போலீஸ், போலீஸ் போர்வையில் கேங்ஸ்டர் என வழக்கமான cat & mouse game தான். போதை பொருளை வெளியுலகில் ஊடுறுவ விடாமல் தடுக்கும் சின்சியர் காவல் துறையினர் ஒருபுறம். போலீஸுக்கு தண்ணி காட்டும் மருத்துவம் பயின்ற கேங்ஸ்டர் சந்தனமாக வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இன்ஃபார்மர்ஸ் உலகம்..காவல் அதிகாரிகளுக்கும், கேங்ஸ்டர்களுக்கும் நடுவே உளவு பார்க்கும் வேலை. அப்படி உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுகிறார் பிரபஞ்சன்(காளிதாஸ்). பல கோடி மதிப்புள்ள கொகைன்களை கண்டுபிடிக்கும் பிரபஞ்சனை கேங்ஸ்டர் சந்தனம்(விஜய் சேதுபதி)கொலை செய்யவே, அவர்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் விக்ரம். கர்ணன் என்ற பெயரில் மறைமுகமாக இருக்கும் கமல் ஹாசன். முதல் பாதியின் இறுதியில் விக்ரமாக புருவம் உயர்த்துகிறார். மகனை கொன்றவர்களை பழிவாங்க மட்டுமே விக்ரம் அவதரிக்கவில்லை, இந்த சமுதாயம் drug free சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலே போராடுகிறார்.

பிளாக் ஸ்குவாட் குழுவாக அன்டர்கவரில் பணிபுரியும் அதிகாரி அமராக வருகிறார் ஃபகத் பாஸில். 24 மணிநேரமும் வேலை என சின்சியர் அதிகாரியாக அவதரித்துள்ளார் ஃபகத். அதிகாரம் செய்யும் தோரணையிலும், அழுவும் காட்சியிலும் அற்புதம் காட்டியிருக்கிறார்.

காளிதாஸ் ஜெயராம், சாந்தான பாரதி, குமரவேல், காயத்ரி இவர்கள் அனைவரும் படத்திற்கு பக்கபலம். ஸ்பாய்லர் என்று எண்ணவேண்டாம்...ஏஜென்ட் டீனாவுக்கு ஹாட்ஸ் ஆஃப் சொல்வீர்கள்.
இரவு, லாரி,பிரியாணி, ஆக்ஷன், சத்தமாக கேட்கும் 90ஸ் பாடல் என லோகேஷின் யுனிவெர்ஸ் வாவ்.

இரண்டாம் பாதியில் போர்க்கண்ட சிங்கத்தின் கர்ஜனை சத்தமாக கேட்கும். போதை பொருள் கடத்தும் கும்பலை அடியோடு அழித்தாரா விக்ரம் ? பேரனின் வருங்காலத்திற்கு என்ன திட்டத்தை விதைக்கிறார் என்பதே இரண்டாம் பாதி.


எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங் என டெக்னிகல் டிபார்ட்மென்ட் என அனைவரும் அவர்களது பணியை சரியாக செய்துள்ளனர்.

ரயிலில் லெக் மூவ்மென்ட் நடனம் துவங்கி, பின்னி பெடலெடுக்கும் அக்ஷன் காட்சி, ஒற்றை கண்ணில் கண்ணீர் துளி என ஆல்ரவுண்டராக திகழ்கிறார் ஆண்டவர்.

ஒரே வார்த்தையில் கூறவேண்டுமென்றால், வயதானாலும் சிங்கம் சிங்கமே...காட்டிற்கும் சரி, நாட்டிற்கும் சரி அதுதான் ராஜா. ராஜலக்ஷ்மி அம்மையாரின் மைந்தனும் அப்படியே. இவர் நடிப்பின் மய்யம்.

ஜூனியர் Vikram-இன் நடிப்புக்கு கலாட்டாவின் ஸ்பெஷல் சல்யூட். உலகநாயகனின் மடியில் தவிழ்ந்த பாக்கியம் உங்களை சேரும்.

கைதி யூனிவர்ஸிலிருந்து வந்த  பிஜாய் கடைசி வரை களத்தில் போராடியது உத்வேகம் தான்.

மொத்தத்தில் லோகேஷ் வைத்த அக்ஷன் படையல் இந்த விக்ரம்.

சில இடங்களில் அங்கங்கே பிசிரு தட்டினாலும், அதாவது வேகம் குறைந்து காணப்படலாம், அதற்கெல்லாம் பின் வரும் காட்சிகள் பதில் சொல்லும் வகையில் இருக்கும்.

உலகநாயகன்,ஃபகத், விஜய் சேதுபதி மூன்று பேரும் ஒரே ஃபிரேமில் வரும் காட்சி கூஸ்பம்களின் கூடாரம்.

விக்ரம் - வெற்றி பெற்றவன், இமயம் தொட்டுவிட்டவன் ! 86-ல் வந்த இந்த வரிகள் 2022-லும் பொய்க்கவில்லை.

இறுதியில் இதயத்த தொட்டது யாருயா.. கெஸ்ட் என்ட்ரியா வந்தாருங்க நடிகர்  சூர்யா. சம்பவம் தொடரும் !!! கில்லியாய் டில்லியை தந்த லோகி யூனிவர்ஸில் இனி லைஃப் டைம் செட்டில்மெண்ட் தான். 

ஆரம்பிக்கலாங்ளா....