இயக்குனர் சாம் ஆன்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான திரைப்படம் கூர்கா. முழுக்க முழுக்க காமெடி படமான இந்த படத்தில் கூர்கா பஹதுர் பாபுவாக நடித்துள்ளார் யோகிபாபு. இவருடன் எலிசா, டான்சர் ஜப்பான், லிவிங்ஸ்டன், ஆனந்தராஜ், சார்லி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ghurka

 

பரம்பரை கூர்காவாக இருக்கும் யோகிபாபு காவலதிகாரியாக ஆசைப்படுகிறார். அதன் பின் சக்திமான் செக்யூரிட்டி சர்விஸில் சேர்ந்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் பணிபுரிகிறார். பயிற்சியில் தோல்வி பெரும் யோகிபாபுவிற்கு தம்பியாக அண்டர்டேக்கர் எனும் ஐந்து அறிவு ஜீவன் சேர்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து என்ன செய்கிறார்கள் என்பது தான் கதைச்சுருக்கம்.

 

ghurka

 

இயக்குனர் சாம் ஆன்டன், எதார்த்த கதையம்சம் கொண்ட கதைகளை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய பங்குண்டு. கூர்காவாக இருப்போர்களின் வாழ்க்கையை அழகாக திரையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். முதல் பாதி சற்று மந்தமாக போனாலும், இரண்டாம் பாதியில் வேகத்தை கூட்டியிருக்கிறார். சார்லி, மனோபாலா, ஆனந்த ராஜ் போன்ற துணை நடிகர்களிடம் சரியான நடிப்பை வாங்கியுள்ளார். படத்தில் நடித்த அண்டர்டேக்கர் எனும் ஐந்து அறிவு ஜீவன் முழு நேரம் பயணம் செய்கிறது. ஆனால் சொல்லும் அளவிற்கு ஈர்க்கத்தவறுகிறது.

 

yofs

 

யோகிபாபுவின் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு இருந்தது. ஆனால் அதே காமெடி, அதே வருது பார், அதே பக்கெட் மூஞ்சி, நீட்டு மூஞ்சி என பழக்கப்பட்ட காமெடி செய்திருக்கிறார். எமோஷன் காட்சிகளில் கூட காமெடியாக தான் தெரிகிறார். இதற்கு முன் நடித்த தர்மபிரபு படத்துடன் ஓப்பிடுகையில், இது ஓகே என்று சொல்லலாம்.

யோகிபாபுவின் காதலியாக வரும் எலிசா கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார், ஆனால் டம்மி ஹீரோயினாகவே திகழ்கிறார். ஒரு பாடலில் மட்டும் உடல் நெளித்து ஆடியுள்ளார். தீவிரவாதியாக வரும் வில்லன் சொல்லும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ட்விஸ்ட் என்று ஏதும் இல்லை, காட்சிகள் அடுத்தடுத்து என்ன என அறிய முடிகிறது.

 

dsdf

 

ராஜ் ஆர்யனின் இசை பக்கபலமாக இருந்தது. குறிப்பாக பின்னணி இசை காமெடி படங்களுக்கு இருக்கும் வழக்கமான டெம்ப்ளட் தான். எடிட்டிங் படத்திற்கு பெரிய பலம்.காட்சிகளை கணிக்க முடிந்தாலும், நிச்சயம் இப்படம் என்டர்டெயின் செய்யும் என நம்பலாம்.