கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கீ திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள கொரில்லா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

 

 

தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் மக்களை கவர்ந்தாலும் ஜீவாவை.சிவா மனசுல சக்தி,என்றென்றும் புன்னகை,கவலை வேண்டாம் போன்ற படங்களை போல இந்த படம் ஜீவாவுக்கு வெற்றியை தருமா என்பதை பார்க்கலாம்

 

 

சின்ன சின்ன திருட்டுகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருபவர் படத்தின் நாயகன் ஜீவா.தங்களது பணக்கஷ்டங்களை போக்க வேண்டி ஒரு வங்கியை கொள்ளையடிக்க முடிவெடுக்கின்றனர்.ஹீரோ தனது நண்பர்களுடன் வங்கியை கொள்ளையடித்தாரா,அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை.

 

 

இந்த கதையில் காதல்,காமெடி,சமூக கருத்து என அனைத்தையும் கலந்து மக்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை தர முயற்சி செய்துள்ளனர் படக்குழுவினர்.ஜீவா ஜாலியான இளைஞராக தனது வழக்கமான சேட்டைகளுடன் ஜீவா என்ற கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்திப்போகிறார்இது படத்தின் மிகப்பெரும் ப்ளஸ் பாயிண்ட்டாக அமைகிறது.

 

 

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஷாலினி பாண்டே இந்த படத்தில் பெரிதாக பயன்படுத்தப்படாதது மைனஸ்.படத்தின் முக்கிய காட்சிகளில் அவர் இருந்தும் அவரை உபயோகப்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.

 

 

விவேக் பிரசன்னா,சதிஷ்,யோகிபாபு என பல நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும் அவர்களது காமெடி காட்சிகள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகாதது படத்திற்கு மிகப்பெரும் பலவீனமாக அமைந்துள்ளது.மொட்ட ராஜேந்திரன் படத்தில் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை.ராதாரவி தனக்கான கேரக்டரை பக்காவாக செய்துளளர்.இவர்களை தவிர படத்தில் நிறைய கேரக்டர்கள் இருந்தாலும் மனதில் நிற்கும்படி ஒருவரது கேரக்டரும் இல்லை.

 

 

படத்தின் மையக்கரு நன்றாக இருந்தாலும் அதனை திரைக்கதையில் கொண்டுவர கொஞ்சம் தடுமாறுகிறார் அறிமுக இயக்குனர் டான் சாண்டி.சீரியசாக செல்ல வேண்டிய பல இடங்களில் காமெடி என்ற பெயரில் படத்தை திசைதிருப்புகின்றனர்.தன்னிடம் நல்ல ஐடியாக்கள் இருந்தாலும் அதனை மெருகேற்றுவதில் இயக்குனர் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இந்த படம் இன்னும் நல்ல படமாக வந்திருக்கும்.

 

 

படத்தின் சில இடங்களில் மட்டுமே காமெடி ஒர்க்அவுட் ஆனது.படத்தின் மற்றுமொரு முக்கிய பலமாக அமைந்திருப்பது பாடல்கள் எதுவும் நடுவில் வராமல் இருந்தது.ஒரே பாடல் அதையும் படத்தின் ஆரம்பத்திலேயே வைத்து முக்கிய கதைக்குள் போவதற்குள் முடித்துவிட்டனர்.படத்தின் மற்றுமொரு பலம் என்றால் படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 10 நிமிடம் மட்டுமே உள்ளது நன்று.படத்தின் எடிட்டர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.ஒளிப்பதிவாளர் ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான கேமரா பணியை செய்துள்ளார்.

 

 

படத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்ட காங் கொரில்லாவை பெரிதாக பயன்படுத்தாமல் இருந்தது மிகப்பெரிய மைனஸ்.ஈஸியாக குழந்தைகளை கவரும் ஒரு ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு படக்குழுவினர் தவறவிட்டுவிட்டனர் என்றே கூறலாம்.சாம்.சி.எஸ் இசையில் யாரடியோ பாடல் ஓகே.பின்னணி இசையில் தனது பணியை கச்சிதமாக செய்துள்ளார்.

 

 

விவசாய கடனை ரத்து செய்யச்சொல்லும் காட்சி,மற்றும் விவசாயிகள் படும் கஷ்டங்களை சொல்லும் காட்சி என சில காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.ஆனாலும் இந்த காட்சிகள் நமக்கு கத்தி படத்தின் சாயலை கண்முன் கொண்டு வருகிறது.படத்திற்கு சரியான கிளைமாக்ஸ் இல்லை படத்தை வேகமாக முடிக்கவேண்டும் என்று முடித்தது போல் இருந்தது.

 

 

திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல கமர்ஷியல் படத்தை தரமான சமூக கருத்துடன் கொடுத்திருக்கலாம்.திரைக்கதையில் உள்ள தொய்வு காரணாமாக இது சுமார் ரகத்தில் சேர்கிறது.