லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

Thalapathy 64 Second Look Poster Update

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். ஷிமோகாவில் நடக்கும் படப்பிடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார் என்ற தகவல் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. 

Thalapathy 64 Second Look Poster Update

படத்தின் முதல் லுக் போஸ்டர் டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகக்கூடும் என்ற வதந்தி சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இதுகுறித்து விஜய் தரப்பினரிடம் கேட்ட போது இச்செய்தி முற்றிலும் தவறு. ஒரே போஸ்டர் தான் வெளியாகும் என்று தெளிவு படுத்தினர்.