நான்கு வருடம் கழித்து தனுஷுக்கு பாடல் பாடும் அனிருத் ! மேலும் படிக்க...
By Sakthi Priyan | Galatta | December 23, 2019 19:04 PM IST

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கிய பட்டாஸ் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்தது.
எதிர் நீச்சல், கொடி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது நாம் அறிந்தவையே. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர். இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும், ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான சில் ப்ரோ பாடல் பட்டையை கிளப்பி வருகிறது.
படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் தற்காப்பு கலை நிபுணராக வருவது போல் தெரிகிறது. இப்படம் 16 ஜனவரி 2020-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாடலான முரட்டு தமிழன் டா லிரிக் வீடியோ சில தினம் முன் வெளியானது. இதனைத்தொடர்ந்து மூன்றாம் பாடலை அனிருத் பாடியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கு முன் 2015-ல் வெளியான தங்கமகன் படத்தில் இசையமைத்து பாடியிருந்தார் என்பது கூடுதல் தகவல்.
Super exciting update on Vishal - Arya's Enemy - Producer makes fans happy!
10/04/2021 06:26 PM
Leela Samson onboard for this star actor's comeback film - big announcement!
10/04/2021 05:00 PM