சுடுகாட்டில் இறந்த குழந்தையைப் புதைக்க மண் தோண்டியபோது, ஏற்கனவே புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீட்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த ஹிதேஷ் குமார் - வைஷாலி தம்பதியினருக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஹிதேஷ் குமாரின் மனைவி வைஷாலி, அப்பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டலராக பணியாற்றி வருகிறார்.

baby alive

இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்த வைஷாலிக்கு, திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதனால், ஹிதேஷ் குமார் - வைஷாலி தம்பதியினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, இறந்த குழந்தையைப் புதைக்க, அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஹிதேஷ் குமார் மண் தோண்டினார். அப்போது, 3 அடி பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், மண்வெட்டி பட்டு அந்த பள்ளத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பின்னர், அந்த மணலை, கைகளால் அள்ளியபோது, அந்த பள்ளத்தில் பானை ஒன்று இருந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது, அதில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று உயிரோடு இருந்துள்ளது. 

baby alive

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார். அங்குக் குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரைந்த வந்த போலீசார், சுடுகாட்டில் குழந்தை புதைக்கப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.