ஆற்றில் கார் விழுந்த நிலையில், காப்பாற்றும் நோக்கில் குழந்தையைத் தூக்கி வீசும் பதற வைக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நிவாரி பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தின் மேல், குடும்பத்தினருடன் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்புறத்தில் பயணிகள் ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது.

Car carrying River

அப்போது, ஆற்றின் மையப்பகுதியில் ஒன்றை ஒன்று கடந்து செல்லும்போது கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் மோதி, நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

Car carrying River

இதனையடுத்து, கார் ஆற்றில் மூழ்கிக்கொண்டு இருக்கையில், ஆற்றிலிருந்து ஒருவர் கார் மேல் வந்து நிற்கிறார். பின்னர், காரிலிருந்து ஒரு குழந்தையைத் தருகிறார்கள். இதனையடுத்து, அந்த குழந்தையைக் காப்பாற்றும் நோக்கில், பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்தவர்களிடம் குழந்தையை அவர் தூக்கி எறிகிறார். ஆனால், குழந்தை பொதுமக்கள் கையில் விழாமல், எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்து விடுகிறது. 

இதனையடுத்து, பொதுமக்களில் ஒருவர் ஆற்றில் விழுந்து, நீந்திச் சென்று குழந்தையைத் தேடி கண்டுப்படித்து காப்பாற்றுகிறார். அப்போது, மேலே நின்றிருந்த பொதுமக்கள் உதவியுடன் குழந்தையும், காப்பற்ற ஆற்றில் குதித்தவரும் மேலே வருகிறார்கள். 

பின்னர், ஆற்றில் வழுந்த காரில் மொத்தம் 5 பேர் இருந்த நிலையில், அதில் ஒவ்வொருவராக காரின் மேல் பகுதியில் வர முயற்சிக்கிறார்கள். பின்னர், 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Car carrying River

இந்த வீடியோவானது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.