பாலியல் தொல்லைக்கு ஆளான பெண், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த சீதா என்ற பெண், தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பேச்சிப்பாறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜன் என்பவர், சீதாவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

sexual assault

மேலும், சீதாவைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அவர், இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியதாகவும் தெரிகிறது. 

இதனால், கடந்த சில நாட்காளக கடும் மன உலச்சலுக்கு ஆளான சீதா, இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஓடிவந்து அந்த பெண்ணை மீட்டனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண்ணுக்கு ராஜன் என்பவர், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.