ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பனிப்போர் இருந்து வருகிறது. இதனால், அமெரிக்காவின் எதிர்ப்பு நாடுகள்,ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

Iran

இந்நிலையில், பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் ராணுவ புரட்சி பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலிமானி, உளவுப்பிரிவு தலைவர் உட்பட மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் வெடித்துச் சிதறியது. அத்துடன், விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. இதனால், அந்த பகுதியில் தீ பற்றி எரிந்த நிலையில், கரும் புகைகளும் எழுந்தன. 

 

இதனையடுத்து, பாக்தாக் விமான நிலைய தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபரின் உத்தரவின்படியே, இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 

Iran

குறிப்பாக, ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. 

மேலும், வெளிநாடுகளில் அமெரிக்கர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

Iran

இதனிடையே ஈரானில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அத்துடன், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் ஒன்றினையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒன்றினையும் பட்சத்தில், 3 ஆம் உலகப் போருக்கு அது வித்திடும் என்றே அரசியல் அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது.