தமிழ் தெரியாது என்று விமர்சித்த நபருக்கு "தமிழ் என் தாய் மொழி” என்று கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்,  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர். 

Mithali Raj

16 வயதில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதன் முதலாகக் களமிறங்கிய மித்தாலி, தனது முதல் போட்டியிலேயே 114 ரன்கள் குவித்து, அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். 

அதேபோல், தன்னுடைய 19 வது வயதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மித்தாலி, 214 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தார். மேலும், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

அதேபோல், இதுவரை 89 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 2 ஆயிரத்து 364 ரன்களும், 205 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 6 ஆயிரத்து 797 ரன்களும், 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 663 ரன்களும் பெற்றுள்ளார். குறிப்பாக, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் தனதாக்கி உள்ளார்.  Mithali Raj

முக்கியாக கடந்த 20 ஆண்டுகளாகச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, மித்தாலி ராஜ் சாதனை படைத்து வருகிறார். இதற்கு முன்பாக, சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய பெருமையைப் பெற்றுள்ளார். 

இத்தனை சாதனைக்குச் சொந்தக்காரர் ஆன மித்தாலி, கடந்த 1982 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தாலும், அவரது தந்தை துரைராஜ் நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பூர்வீகமாக் கொண்டவர். மித்தாலியின் தந்தை, இந்திய விமானப் படையில் பணியாற்றியதால், பல்வேறு ஊர்களுக்கு அவர் பணி மாறுதல் பெற்றுச் செல்ல நேரிடும். அதனால், மித்தாலி பல்வேறு மாநிலங்களில் பயின்றுள்ளார். 
அதன்படி, மித்தாலியின் தந்தை செகந்திராபாத்தில் பணியாற்றியபோது, மித்தாலி அங்கேயே தனது கல்லூரி படிப்பை முடித்தார். இதனால், மித்தாலிக்கு பல்வேறு மொழிகள் தெரியும். 

இந்நிலையில், சுகு என்பர் தனது டிவிட்டர் பக்கத்தில், மித்தாலிக்கு ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தெரிந்தாலும், அவருக்குத் தமிழ் தெரியாது என்று பதிவிட்டிருந்தார்.

https://d1ydle56j7f53e.cloudfront.net/assets/general-images/1571211642Mithali raj.JPG

தற்போது அதற்குப் பதில் அளித்துள்ள மித்தாலி, 

“ தமிழ் என் தாய் மொழி.. 
நான் தமிழ் நன்றாகப் பேசுவேன்..
தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை.." என்று தமிழிலும்,
“ஆக மொத்தத்தில் நான் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்!” என்று ஆங்கிலத்திலும் அவர் பதில் அளித்துள்ளார்.

மித்தாலியின் இந்த பதிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.