அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீசிய நிலையில், முதலமைச்சர் பழனிசாமி பேட்டிங் செய்து அசத்தி உள்ளார்.

தமிழக அரசு சார்பில், சென்னை மெரினா கிரிக்கெட் மைதானத்தில் IAS - IPS அதிகாரிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Edappadi Palanisamy cricket batting video

இந்த போட்டித் தொடரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீசினார். அப்போது, சில பந்துகள் ஒயிடாக போக, அதையும் விடாமல் விரட்டி சென்று நம்ம முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூக்கி அடித்தார்.

Edappadi Palanisamy cricket batting video

அதனை அங்கிருந்து நேரில் பார்த்த சக IAS - IPS அதிகாரிகள் கை தட்டி நம்ம முதலமைச்சரை இன்னும் உற்சாகப்படுத்தினார். 

இதனையடுத்து, டிஜிபி திரிபாதியும் முதலமைச்ருக்கு பந்து வீசினார். அப்போது, தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட்டை நம்ம முதலமைச்சர் முயற்சித்தார். அதேபோல், பந்து பேட்டில் பட்டு, உயரே பறந்தது. அதனைப் பார்த்தவர்கள் உற்சாக மிகுதியில், கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

 

தொடர்ந்து, IAS - IPS அணிகள் மோதிய முதல் போட்டிக்கு, முதலமைச்சர் டாஸ் போட்டார். அப்போது, ஐ.ஏ.எஸ். அணி டாஸில் வென்றது. இதனையடுத்து, அவர்கள் பேட்டிங்கை தேர்வு செய்து தற்போது விளையாடி வருகின்றனர்.

 cm palanisamy,  palanisamy playing cricket, cricket,

இதனிடையே, தோனி - விராட் கோலிக்கே டப் கொடுக்கும் வகையில், நம்ம முதலமைச்சர் விளையாடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.