மனைவியின் செல்போனில் காதலனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்ததைப் பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சென்னை வடபழனியைச் சேர்ந்த 21 வயதான அஜித்குமார், அங்குள்ள விஜயா ஃபோரம் மாலில் பணியாற்றி வருகிறார். அதே இடத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றி வந்த 21 வயதான ரூபா என்பவரும் பணியாற்றி வந்தார். 

Chennai Husband finds wife affair video on mobile phone

இதனிடையே, இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். 

இதனையடுத்து, இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், எதார்த்தமாக மனைவியின் செல்போனை கணவன் வாங்கி பார்த்துள்ளார். அதில், தனது மனைவி, அவளுடைய முன்னாள் காதலனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன், மனைவியுடன் சண்டைக்குச் சென்றுள்ளார்.

Chennai Husband finds wife affair video on mobile phone

மேலும், திருமணம் ஆன 15 வது நாளே மனைவியை, வீட்டை விட்டு விரட்டி அடித்துள்ளார். பின்னர், மனைவி அங்குள்ள காவல் நிலையத்தில், கணவன் மீது புகார் கொடுக்க, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணமான 15வது நாளே, மனைவியை வீட்டை விட்டு விரட்டியதும், மனைவியின் முன்னாள் காதலனுடன், மனைவியை உல்லாசமாக இருக்கும் வீடியோ விவகாரமும், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.