2020 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது. இதில், புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து முடிவு செய்துள்ளது.

IPL

அதன்படி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது, புதிய விதிமுறையான “பவர் பிளேயர்” முறை அறிமுகமாகிறது. இந்த விதிமுறைப்படி, போட்டி நடந்துகொண்டிருக்கும்போது, பதிலி வீரர் ஒருவரைக் களமிறக்க முடியும்.

 

IPL

ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றார்போல், ஆடும் லெவனில் இடம் பிடிக்காத வீரர் ஒருவரைக் களம் இறக்க முடியும். அதாவது, ஆட்டத்தின் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு அதிக பட்சமான ரன்கள் தேவைப்படும். அந்த நேரத்தில், முக்கியமான விக்கெட்டுகள் எல்லாம் இழந்த நிலையில், பவுலர்கள் மட்டுமே களமிறங்கி ரன்கள் எடுக்கப் போராடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த நேரத்தில், ஆடும் லெவனில் இல்லாத பதிலி வீரரைக் களமிறக்கிக்கொள்ள முடியும்.

IPL

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்க இந்த புதிய விதிமுறையை, வரும் 2020 ஆண்டில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.