20019 ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி இன்று அதிகாலை பிறந்தது.

விகாரி வருடம் (29.10.19) ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி அதிகாலை சரியாக 3.49 மணிக்கு, குருப்பெயர்ச்சி நடைபெற்றது. அதன்படி, குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசியில் வந்து அமர்ந்தார். 

Astrology

குருப்பெயர்ச்சியை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகத்தில் உள்ள குருபகவான் சன்னதிகளில், அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

குறிப்பாகத் திருவாரூர் அடுத்த ஆலங்குடி குரு பரிகார கோயிலில், குருப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாகக் கோயில் உள்ள பஞ்ச மூர்த்திகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும், மகா தீபராதனைகளும் செய்யப்பட்டன.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் திட்டை என்னும் ஊரில் அருள்பாலித்து வரும் குருபகவானுக்குச் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.

குருப்பெயர்ச்சி ஆண்டுதோறும் வந்தாலும், ஒவ்வொரு 12 வருடங்களுக்கு ஒரு முறை சிறப்பு மிக்க குருப்பெயர்ச்சி வருவதுண்டு. 12 வருடங்களுக்கு ஒருமுறை தான், குரு பகவான் தன்னுடைய சொந்த வீடான தனசு ராசிக்கு வருவார். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு தான், 2019 ஆம் ஆண்டு தற்போது பிறந்துள்ள குருப்பெயர்ச்சி அமைந்திருக்கிறது.

Astrology

குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு இன்று வந்துள்ளார். ஏற்கனவே தனசு ராசியில் இருக்கும் சனி, கேது உடன் ஒன்றாகச் சேர்ந்து இருக்கப்போகிறார். இதனால் குரு, சனி, கேது ஆகிய இந்த 3 கிரகங்களும் மக்களுக்கு, தயவு தாட்சினைப் பார்க்காமல் மிகுந்த நல்ல பலன்களையே தரும் என்று ஜோதிட வல்லூநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பா, இந்த ஒரு வருட காலம் முழுவதும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்று பிறந்துள்ள குருப்பெயர்ச்சியானது அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.