“காதலித்து தேடிக் கொண்ட என் வாழ்க்கையை நானே முடித்து கொள்கிறேன்!” என்று, காதல் திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவியின் கள்ளக் காதலால் தன் குழந்தை உடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, இரு வீட்டார் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கணேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, கணேஷிற்க நிரந்தர வேலை கிடைக்காததால், அந்த பகுதியிலேயே கணேஷ் கூரியர் டெலிவரி வேலை செய்து வந்தார்.

இதனையடுத்து, இந்த தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு தற்போது சுமார் 7 வயது நடந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், பணத்திற்கு ஆசைப்பட்ட கணேஷின் மனைவி, அந்த பகுதியில் சில ஆண்களுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால், பலருடன் கணேஷின் மனைவி கள்ளக் காதலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல், கணேஷிற்கு தெரிய வந்த நிலையில், இதனைக் கேட்டு அவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து, தன் மனைவியிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், இது பற்றி அவர் துளியும் கவலைப்படவில்லை. ஆனாலும், தன் கள்ளக் காதலை அவர் தொடர்ந்துகொண்டே இருந்துள்ளார்.

இப்படி, சம்பத்தன்று, கணேஷ் வேலைக்குச் சென்று இருந்த நிலையில், கணேஷின் மனைவி மற்றும் அவரது பெண் குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அந்த நேரம் பார்த்து, கணேஷ் வீட்டிற்கு வந்த அவரது மனைவியின் கள்ளக் காதலன், கணேஷ் மனைவியிடம் தப்பாக இருந்துகொண்டு, கணேஷ் மகளிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அன்று மாலை வேலைகளை முடித்துக்கொண்டு கணேஷ் வீடு திரும்பி உள்ளார். அப்போது, தாயின் காதலன் என்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததை, அப்பாவிடம் கூறி, மகள் அழுதுள்ளார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த கணேஷ், இது குறித்தும் தன் மனைவியிடம் சண்டை போட்டு உள்ளார். ஆனால், இதற்கும் அவர் கவலைப்படாமல் எனக்கு பணம் தான் முக்கியம் என்று அவர் கூறியதாகத் தெரிகிறது. 

இதனால், கடும் மன உளைச்சலாக்கு ஆளான கணேஷ், இது தொடர்பாக தன் நண்பர்களுக்கு ஒரு வீடியோ ஒன்றைப் பேசி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என் மனைவி பலருடன் பணத்திற்காக கள்ளக் காதலில் இருந்து வருகிறார். இப்படி, என் மனைவியுடன் இருந்த நபர், என் மகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக என்னிடம் என் மகள் கூறினார். மனைவியின் இந்த செயல் குறித்து, நான் பலமுறை அவளை கண்டித்தும், அவள் திருந்தவில்லை. அவளை என்ன செய்து என்றும் எனக்குத் தெரியவில்லை. இதனால், அவளைக் காதலித்துத் தேடிக் கொண்ட என் வாழ்க்கையை நானே முடித்துக் கொள்கிறேன்” என்று, அதில் உருக்கமாகப் பேசியிருந்தார்.

இதனையடுத்து, அவரும், அவர் மகளும், வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார். தலைமறைவாக உள்ள கணேஷ் மனைவியைத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.