கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சன் டிவி,விஜய் டிவியில் சில சீரியல்கள் மட்டும் நடிகர்கள் வரமுடியாததால் கைவிடப்பட்டது.சில சீரியல்களில் நடிகர்களை மாற்றிவிட்டு ஷூட்டிங்கை தொடர்ந்து வருகின்றனர்.விறுவிறுப்பாக கடந்த 8ஆம் தேதி முதல் ஷூட்டிங்குகள் நடைபெற்று வருகிறது.புதிய எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்

கலர்ஸ் தமிழ்,சன் டிவி,ஜீ தமிழ்,விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் புதிய தொடர்களின் ஒளிபரப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் ஞாயிற்றுகிழமையும் சீரியல்களை ஒளிபரப்புவதாக தற்போது அறிவித்துள்ளனர்.இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

இனி Extra Entertainment தான்!👌

உங்கள் மனம் கவர்ந்த மெகா தொடர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகும்!

தினமும் 7.30 மணி முதல் 10.30 வரை#ZeeTamil pic.twitter.com/PEVMujBnxk

— Zee Tamil (@ZeeTamil) August 5, 2020