நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மக்கள் தங்களது சொந்தங்களை இழந்துள்ளனர். பல அரசியல் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையும் அதில் சிலர் உயிரிழப்பதையும் பார்த்து வருகிறோம். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் உயிரிழந்தது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த “திரு.கே.வி.ஆனந்த்” அவர்களின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆண்தேவதை திரைப்படத்தின் இயக்குனரான “திரு.தாமிரா”வும் கொரோனாவால் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகர் “பாண்டு” இளம் துணை நடிகர்களான “நித்திஷ் வீரா” மற்றும் “மாறன்” உள்ளிட்டோரின் மரணம் தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அந்தவகையில் மேலும் ஒரு பிரபல இளம் தமிழ் நடிகர் உயிரிழந்துள்ளார். இயக்குனர் பி.மாரிமுத்துவின் இயக்கத்தில் வெளிவந்த “தொரட்டி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் “ஷமன் மித்ரு”. தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருந்த ஷமன் மித்ரு “தொரட்டி” திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஷமன் மித்ருவின் தொரட்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலைய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளான நடிகர் ஷமன் மித்ரு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் ஷமன் மித்ரு சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். ஷமன் மித்ரு-ன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

#thoratti hero #ShamanMithru passed away due to #COVID19 #RIPShamanMithru pic.twitter.com/hJ6buk5xe2

— NadigarSangam PrNews (@NadigarsangamP) June 17, 2021