2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ரமேஷ் ராவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.