தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி
டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.40 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படத்தின் டீஸர் குறித்து யூடியூப் இந்தியா நிறுவனம் சில ட்வீட்களை பதிவிட்டனர்,இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.இந்நிலையில் இதற்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இது வெறும் டீஸர் தான் என்று ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்துள்ளனர்.இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி முடிவான பின் புதிய ட்ரைலர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
Idhu verum teaser dhaan nanba! 😎
— XB Film Creators (@XBFilmCreators) November 26, 2020