ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷுவரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வெளிவந்துள்ள வாரிசு திரைப்படம் ரிலீசான 5 நாட்களில் 150 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கொண்டாடி வரும் வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் ஊடகத்தாருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று ஜனவரி 16ஆம் தேதி வாரிசு படக்குழுவினர் கலந்து கொண்ட நன்றி கூறும் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தங்களது நன்றியை மனமார தெரிவித்தனர்.

அப்போது பேசிய நடிகர் VTV.கணேஷ் இசை வெளியீட்டு விழா மேடையை கலகலப்பாக்கியது போலவே இந்த விழா மேடையையும் கலகலப்பாக்கினார். குறிப்பாக இயக்குனர் வம்சி அவர்கள் தமிழ் பேசும் விதத்தை குறிப்பிட்டு பேசி தமிழை எப்படி பேச வேண்டும் என அவருக்கு தனக்கே உரித்தான ஸ்டைலில் ஸ்வீட்டாக அட்வைஸ் கொடுத்தார். அவரது பேச்சால் மொத்த அரங்கமும் சிரிப்பால் கலகலப்பானது.

அப்படி பேசுகையில், “அவர பார்த்தீங்கல்ல ஃபுல்லா ஹாலிவுட் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் தான்! நடுவுல கொஞ்சம் தமிழ் பேசுனா அது இதுன்னு சொல்வாரு. சார் அது இதுன்னு எல்லாம் பேசக்கூடாது. அது வந்து ஆடு மாடுகள சொல்றது. மனுஷங்கள அவங்க.. இவரு.. சாரு.. அப்படித்தான் பேசணும் அது ஒன்னு தான். அது போக போக நான் கத்துக்கொடுத்தறேன்! மரியாதை.. தமிழ்ல ரொம்ப மரியாதையா பேசணும்! அது இதுன்னா கப்புன்னு கோவம் வந்துரும் நம்ம பசங்களுக்கு, அது கொஞ்சம் தான் தெரிஞ்சுக்கலாம் பின்னாடி பார்த்துக்கலாம்…” என கணேஷ் கொடுத்த இந்த ஸ்வீட் அட்வைஸ் மற்றும் தில் ராஜூ தமன் என ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசிய விஷயங்கள் அனைத்தும் அனைவரையும் சிரிக்க வைத்தது. அட்டகாசமான அந்த வீடியோ இதோ…