இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் VJ பாவனா. கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடல் மற்றும் கிரிக்கெட் கமென்ட்ரி போன்ற விஷயங்களில் ஈடுபடுவதால், இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் நடந்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினார் பாவனா.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, பாடல் பாடுவது, நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாவனா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் பாடி பதிவு செய்துள்ளார். 3 படத்தில் இடம்பெற்ற கண்ணழகா பாடலை பாடியுள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளனர். இந்த வீடியோ ட்விட்டரை தெறிக்க விடுகிறது.

For the folks who asked me to sing ONLY in Tamizh.
And for the ones who wanted me to sing a @anirudhofficial composition.
The whole album of 3 is phenomenal but the charanam of this song is just magic!@shrutzhaasan s voice pierces the soul n the interludes tug at your heart❤️ pic.twitter.com/o5nfXxmOkL

— Bhavna Balakrishnan (@Bhavna__B) April 23, 2020