திரையுலகில் சின்ன கலைவானராக திகழபவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதர். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2, அரண்மனை 3 போன்ற படங்கள் உருவாகியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் செய்திளை கொண்டு மீம்ஸ்கள் உருவாகி வருவதை காண முடிகிறது. சமீபத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்ட போது, பலரும் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டு வந்தார்கள். மொத்தத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு இந்த கொரோனா விடுமுறை பொற்காலம் என்றே கூறலாம். அப்படி ஒரு சிலர் தங்களது மீம்ஸ்களில் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்தை வைத்து உருவாக்கியுள்ளனர். அவரை நேசிக்கும் பலருக்கு இது முகச்சுழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு முழுவதுமுள்ள அனைத்து மீம் கிரியேட்டர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், கேலி செய்ய பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அய்யாவின் படங்களை மீம்களில் பயன்படுத்த வேண்டாம். நாம் அனைவரும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அவரை மதிக்கவேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி என்று பதிவு செய்துள்ளார்.

I hereby request all meme creators throughout the nation, not to use Bharath Ratna Dr.Kalam sir”s pics in their memes as a matter of joking or ridiculing somebody or some ideas!! As we all , especially TN,respect Him as He is the mentor for the youth n students🙏🏼

— Vivekh actor (@Actor_Vivek) June 12, 2020