கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களால் விருந்தளிக்கவுள்ளார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் விஷ்ணு விஷால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் என் முதல் படத்துக்கு பிறகு , திரையுலகில் சிம்பு தான் என் முதல் நண்பர். இருவரும் மனதளவில் ஒருவருக்கொருவர் நல்ல மரியாதையுடன் இருக்கிறோம். மற்ற திரையுலகினரை விட சிம்பு மிகவும் வெளிப்படையானவர். ராட்சசன் படத்தின் போது பல்வேறு விஷயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது என த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார்.