தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.இவர் நடித்துள்ள காடன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் அடுத்ததாக FIR,மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காடன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விரைவில் ஜுவாலா கட்டாவைத் திருமணம் செய்யவிருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார்.விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருமே நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருமே தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினார்கள்.

ஏப்ரல் 22-ம் தேதி அன்று திருமணம் நடைபெறும் என்று விஷ்ணு விஷால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.இருவருக்குமான திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.திருமணத்திற்கு இருவரும் கோலாகலமாக தயாராகி வந்தனர்.

காலை முதலே இருவரின் திருமண சடங்கு புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவை சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வந்தன.தற்போது விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.இருவருக்கும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor @TheVishnuVishal & @Guttajwala are now officially married!💍 Congratulations on this new phase of your life✨💕🎊🎉#JwalaVished #VishnuVishal #JwalaGutta @V4umedia_ pic.twitter.com/JitHodOQ0J

— RIAZ K AHMED (@RIAZtheboss) April 22, 2021