ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் விஷாலின் லுக்கை இன்று டிசம்பர் 17 வெளியிட்டுள்ளது படக்குழு. கையில் துப்பாக்கியுடன் மாஸான லுக்கில் உள்ளார் புரட்சி தளபதி விஷால். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட படப்பிடிப்பின் போதே படத்தின் ஓப்பனிங் சாங்கை முடித்தனர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் மலேசியாவில் முக்கிய காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. ஊட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்கினர் படக்குழுவினர்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் ரிலீஸ் பணிகள் ஒருபுறம் போய் கொண்டிருக்கிறது. நடிகர் ஆர்யா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் அறிவிப்பு வெளியாகி திரை ரசிகர்களுக்கு விருந்தளித்தது. பாக்ஸர் ரோலுக்காக தன்னை முழுமையாக செதுக்கியிருந்தார் ஆர்யா. ஆனந்த் ஷங்கர் படத்தில் ஆர்யா எந்த லுக்கில் இருப்பார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

#ENEMY FL 🎥🙏🏽 pic.twitter.com/Qm8ix2e8Fk

— Anand Shankar (@anandshank) December 17, 2020